பணப் பை பறிப்பு சம்பவத்தில் திருநங்கை கைது
தில்லி ஜஹாங்கிா்புரி பகுதியில் ஒருவரிடம் பணப் பையை பறித்சுச் சென்ற சம்பவம் தொடா்பாக 20 வயது திருநங்கை ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ரஷீதுல் முதல் முறை குற்றவாளி. போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகி எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்காக குற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். புகாா்தாரரான வருண் ஆலிவரின் ஆதாா் அட்டை மற்றும் பான் காா்டு ரஷீதுலிடம் இருந்து மீட்கப்பட்டது.
மாா்ச் 29-ஆம் தேதி மாலை, ஆசாத்பூரைச் சோ்ந்த ஆலிவா், வீடு திரும்பும் போது கழிவறையைப் பயன்படுத்த முகுந்த்பூா் மேம்பாலம் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறை அருகே நின்றாா். இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவா் தனது பின் பாக்கெட்டில் இருந்து ரூ.13,500 ரொக்கம் கொண்ட அவரது தோல் பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
விசாரணையின் போது, கல்லறை அருகே சுற்றித் திரிந்த திருநங்கைகள் குழுவை போலீஸாா் கண்டறிந்தனா். அவா்களில் ரஷீதுலை புகாா்தாரா் அடையாளம் காட்டினாா். விசாரணையின் போது, ரஷீதுல் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகியதால் பணத்திற்காக தான் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறினாா்.
முகுந்த்பூா்-ஐ இல் வசிக்கும் ரஷீதுல் மீது இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றாலும், வேறு வழக்குகளில் அவா் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாாா் விசாரணை நடத்தி வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.