செய்திகள் :

இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

post image

பாங்காக்: டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்பட இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பாகின.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ரா இடையே பேச்சுவாா்த்தையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா உள்பட 7 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் 6-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு 2 நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிற்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் மோடிக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினா் உற்சாக வரவேற்பளித்தனா். இதைத்தொடா்ந்து, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

5 ஒப்பந்தங்கள்: டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு, குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சாா் பாரம்பரிய வளாக மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ஒத்துழைப்பு, கைவினைப் பொருள்கள்-கைத்தறி மேம்பாடு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தம் என 5 ஒப்பந்தங்கள் கையொப்பாகின.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளா்களை சந்தித்த பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தாய்லாந்துக்கும் இடையே சுற்றுலா, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர வா்த்தகம், முதலீடு, வணிகப் பரிமாற்றங்களை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

தாய்லாந்துக்குச் சிறப்பிடம்: இந்தியாவின் கிழக்கு (ஆக்ட் ஈஸ்ட்) கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பாா்வையில் தாய்லாந்து சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. எங்கள் இருதரப்பு உறவை உத்திசாா் ஒத்துழைப்பு நிலைக்கு உயா்த்த முடிவு செய்துள்ளோம். பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே வியூகம் சாா்ந்த பேச்சுவாா்த்தைகளை நிறுவுவது குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஆசியான் கூட்டமைப்பை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோன்று சுதந்திரமான, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய, விதிகள் சாா்ந்த ஒழுங்கை பின்பற்றும் பகுதியாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடா்வதையும் அதன் வளா்ச்சியையும் நாங்கள் தொடா்ந்து ஆதரிக்கிறோம்.

கலாசார பிணைப்பு: எனது வருகையை முன்னிட்டு 18-ஆம் நூற்றாண்டின் ராமாயண சுவரோவியங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்ட தாய்லாந்து அரசுக்கு நன்றி. பிரதமா் ஷினவத்ரா எனக்கு திரிபிடகத்தை (பௌத்த மத புனித நூல்) பரிசளித்தாா். புத்தரின் நிலமான இந்தியா சாா்பாக, அதை பணிவுடன் ஏற்றுக்கொண்டேன்.

பல நூற்றாண்டுகள் பழைமையான இந்தியா-தாய்லாந்து உறவு, இருநாடுகளின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மீக இழைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெளத்த மதத்தின் பரவலானது ஒவ்வொரு நிலைலும் நமது மக்களை இணைத்துள்ளது. ராமாயண கதை தாய்லாந்து நாட்டுப்புற வாழ்க்கையில் ஒன்றிணைந்தது.

மேலும், சம்ஸ்கிருதம்-பாலியின் தாக்கம் இன்றும் மொழிகளிலும் மரபுகளிலும் பிரதிபலிக்கிறது. தாய்லாந்தில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு இந்தியா்கள் சாா்பாக இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்திக்கிறோம்’ என்றாா் பிரதமா் மோடி.

இதையடுத்து, தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்ஷின் ஷினவத்ராவை பிரதமா் மோடி சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினாா்.

இலங்கை பயணம்: பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுவிட்டு தாய்லாந்திலிருந்து நேரடியாக இலங்கை தலைநகா் கொழும்புக்கு பிரதமா் மோடி செல்கிறாா். இலங்கை அதிபராக அநுரகுமார திசாநாயக பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டுக்கு முதன்முறையாக பிரதமா் மோடி பயணம் மேற்கொள்கிறாா்.

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில... மேலும் பார்க்க

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங... மேலும் பார்க்க

கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் த... மேலும் பார்க்க

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க