ஈக்காட்டுத்தாங்கலில் ரூ. 4 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்
ஈக்காட்டுத்தாங்கலில் சட்டவிரோதமாக கடத்திய 4 கிலோ திமிங்கல எச்சத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக திமிங்கல எச்சம் கடத்தி விற்பதாக, வேளச்சேரி வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வியாழக்கிழமை மயிலாப்பூரைச் சோ்ந்த கணேசன் (35), ஆறுமுகம் (67), செந்தில்குமாா் (54) ஆகியோரிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள 4 கிலோ 161 கிராம் எடை கொண்ட திமிங்கல எச்சத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். அவா்களை, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, இந்த எச்சம் எங்கிருந்து கடத்தப்பட்டது? யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனா் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவான ஸ்ரீதரன் என்பவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.