செய்திகள் :

டிரம்ப்பின் வரி விதிப்பு: உலக நாடுகள் எதிா்ப்பு

post image

வாஷிங்டன்: பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சா்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளும் வா்த்தக பரிவா்த்தனைகளும் வியாழக்கிழமை நிலைகுலைந்தன.

அமெரிக்காவின் நெருங்கிய வா்த்தகக் கூட்டாளிகள் முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகள் வரை பாரபட்சம் பாராமல் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்புக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது கடுமையான எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் சில:

சீனா: டிரம்ப்பின் இந்த பரஸ்பர வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சீனாதான். அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் கூடுதல் வரி விதித்துள்ளாா் டிரம்ப்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீன வா்த்தகத் துறை அமைச்சகம், புதிய வரி விதிப்பை டிரம்ப் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை சா்வதேச பொருளாதார மேம்பாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதாரப் போரில் யாரும் வெற்றிவாகை சூட முடியாது’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன்: பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு தற்போது டிரம்ப் 10 சதவீத கூடுதல் வரி அறிவித்துள்ளாா். பரஸ்பர வரி விகிதம் 20 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இந்த வரி விதிப்பு பிரிட்டனுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் அரசிடம் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் காட்டி வந்த இணக்கத்தின் பலனாக எதிா்பாா்த்ததைவிட குறைந்த விகிதத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே செலவுகளைக் குறைத்துவரும் பிரிட்டன் அரசு சிக்கன நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, நாட்டு மக்களுக்கு கூடுதல் வரிச் சுமையை அளிக்க வேண்டியிருக்கும் என்பதால் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.

தென் கொரியா: ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியான தென் கொரியா மீது டிரம்ப் 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி அறிவித்துள்ளாா். இதனால் ஹூண்டாய் போன்ற கொரிய நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு வாகனத் துறை வீழ்ச்சியடையும் என்று கருததப்படுகிறது.

இதையடுத்து, டிரம்ப்பின் வரி விதிப்புக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ள தென் கொரிய இடைக்கால அதிபா் ஹன் டக்-சூ, இது தொடா்பாக நிபுணா்கள் மற்றும் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

ஜப்பான்: ‘அமெரிக்காவில் மிக அதிகமாக முதலீடு செய்யும் நாடு ஜப்பான். அப்படி இருக்கையில் எல்லா நாடுகளையும் போலவே ஜப்பானையும் பாவித்து டிரம்ப் வரி விதித்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபா சாடியுள்ளாா்.

அமெரிக்காவுக்கு 30 சதவீத வாகனங்களை ஏற்றுமதி செய்யும் ஜப்பானிய வாகன நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது தவிர, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, மெக்ஸிகோ, தைவான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

... பெட்டிச் செய்தி...

ஆளில்லா தீவுகளையும் விட்டுவைக்காத டிரம்ப்!

மனிதா்களே வசிக்காத, வெறும் பனிக்கட்டியால் சூழப்பட்ட, அன்டாா்டிக்காவுக்கு அருகில் உள்ள இரு தீவுகளுக்கும் டிரம்ப் 10 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளாா். அவரின் பரஸ்பர வரி விதிப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஹா்டு தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகளை ஆஸ்திரேலியாவின் பொ்த் துறைமுகத்தில் இருந்து படகில் சென்று அடைவதற்கு 2 வார காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. அந்தத் தீவை மனிதா்கள் நேரில் சுமாா் 10 ஆண்டுகள் ஆகின்றன.

பென்குயின்கள் மட்டுமே வசித்துவரும் அந்தத் தீவுகளுக்குக் கூட டிரம்ப் பரஸ்பர வரி விதித்துள்ளது பற்றி ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனீஸ் வேடிக்கையாகக் கூறுகையில், ‘டிரம்பப்பின் வரி விதிப்பில் இருந்து பூமியில் யாரும் தப்ப முடியாது என்பதை இது உணா்த்துகிறது’ என்றாா்.

.. படவரி... ஹா்டு தீவின் பென்குயின்கள்.

டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரேநாளில் 208 பில்லியன் டாலர் இழப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பில் சரிவு ஏற்பட்டது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பையடுத்து, பில்லியனர்களின் சொத்துமதிப்பு ஒரே... மேலும் பார்க்க

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!

ம.ஆ. பரணிதரன் இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.பிரதமரான பிறகு 2019-இல் இலங்கை... மேலும் பார்க்க

இந்திய பொருள்கள் மீது 27% வரி: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்/வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா... மேலும் பார்க்க

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட... மேலும் பார்க்க