செய்திகள் :

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி... நாகப்புள்ளி’ - மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

post image

மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் அதே பதவிக்கு முயன்றுவருகிறாராம். அவருக்கு மேதகுவின் ஆதரவும் இருக்கிறதாம். மறுபுறம், பல்கலைக்கழகத்தின் மற்றோர் அதிகாரப்புள்ளியும், உச்சப் பொறுப்புக்கு வர முயன்றுவருகிறாராம். அவருக்கு மாண்புமிகுவின் ஆதரவு இருக்கிறதாம்.

இப்படிப் பதவிக்காக நடக்கும் போட்டியால், பல்கலைக்கழகத்தில் கோஷ்டிகள் உருவாகி, சண்டைகளும் வெடிக்கின்றனவாம். இதனால், பல்கலைக்கழகப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘இதற்கு விரைவிலேயே தீர்வு காணவில்லையென்றால், பல்கலைக்கழகப் பஞ்சாயத்து வீதி வரைக்கும் வந்துவிடும்’ என்கிறார்கள் பேராசிரியர்கள்!

டெல்டா மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில், இலைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற லோக்கல் மாஜி, மாவட்டப் பிரதிநிதி ஒருவரை மரியாதைக் குறைவாகத் திட்டித் தீர்த்திருக்கிறார். அந்த மாவட்டப் பிரதிநிதி அன்று இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

‘மாஜி திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகித்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல், விவகாரம் மூடிமறைக்கப்பட்டுவிட்டது’ என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தவுடன், ‘திடீரென’ இலைக் கட்சித் தலைமையை மாஜிப் பிரமுகர் சந்தித்துப் பேசியிருப்பது, இலைக் கட்சிக்குள் பல்வேறு சந்தேகத் தீயைப் பற்றவைத்திருக்கிறது!

சூரியக் கட்சியின் பொதுக்குழு தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும் சூழலில், ‘அணிகள் தொடங்கி அனைத்து நியமனங்களையும் விரைவில் முடித்தாக வேண்டும்’ என்று `கறார்’ உத்தரவு போட்டிருந்தது சூரியக் கட்சியின் தலைமை. ஆனாலும், ஒரு சில அணிகளைத் தாண்டி இன்னும் பல அணிகளின் நியமனங்கள் முழுமையடையவில்லையாம். ‘அதற்கு மாவட்டச் செயலாளர்களின் தலையீடுதான் காரணம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதாவது, ‘சார்பு அணிகளுக்கு நாங்கள் கைகாட்டும் ஆட்களைத்தான் நியமிக்க வேண்டும்’ என்று `கறார்’ காட்டும் மாவட்டச் செயலாளர்கள், தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்குப் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்களாம். அதனால்தான், நியமனங்களை நேரத்தில் முடிக்க முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறதாம். இந்தத் தகவல் மேலிடத்துக்குச் செல்லவே, ‘ஏப்ரல் இறுதிக்குள் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை என்றால், உங்கள் இடம் மாற்றப்படும்’ என்று மாவட்டச் செயலாளர்களிடம் கறார் காட்டியிருக்கிறதாம் தலைமை!

அகில இந்திய அளவில், சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறது மலர்க் கட்சித் தலைமை. அந்த வகையில், ‘தமிழகத்திலும் மாற்றம் வரலாம்’ என்கிறார்கள் அந்தக் கட்சியினர். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, ஆளாளுக்கு டெல்லிக்குப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘மாநிலத் தலைமையைப் பிடித்தே ஆக வேண்டும்’ என்று உறுதியாக இருக்கும் கொங்குப் பெண்புள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி பெயரில் சமீபத்தில் டெல்லியில் விழா எடுத்தார். அந்த விழாவுக்கு, மலர்க் கட்சியின் சீனியர் தலைகளையெல்லாம் வரவழைத்து ‘வெயிட்’ காட்டியிருக்கிறார்.

அதேநேரம், தென்மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்புள்ளிக்கும் ‘யோகம்’ அடிக்கலாம் என்கிறது மலர்க் கட்சி வட்டாரம். ‘அவரின் சமூகம், தனிப்பட்ட செல்வாக்கு, இலைக் கட்சியுடனான தொடர்பு என எல்லாவற்றையும் கணக்கு போட்டு, தலைமைப் பதவிக்கு அவர் பெயரையும் பரிசீலனை செய்கிறது டெல்லி’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இன்னும் ஒரு வாரத்தில் மாற்றத்துக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுவதால், மலர்க் கட்சியில் அனல் பறக்கிறது!

தலைநகரில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம், காவல்துறையில் இருக்கும் பல ஓட்டைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. அதில் ஒன்று, வாக்கி டாக்கி பற்றாக்குறை. அதாவது, சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு, வாக்கி டாக்கி மூலமாக ஆர்டர் போட்டிருந்தது சென்னை பெருநகரக் காவல்துறை. ஆனால், வாக்கி டாக்கி பற்றாக்குறை காரணமாக, சப்-இன்ஸ்பெக்டர்கள், பீட் ஆபீஸர்களாக இருக்கும் தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோரிடம் அந்தத் தகவல் உடனடியாகப் போய்ச் சேரவில்லையாம்.

வாக்கி டாக்கி

ஒவ்வொருவரையும் செல்போனிலேயே அதிகாரிகள் ஒருங்கிணைத்து, விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘தலைநகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் வாக்கி டாக்கிகள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறதாம். இந்தத் தகவல் டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், சில பழைய வில்லங்க விவகாரங்களை முன்வைத்து, புதிய வாக்கி டாக்கிகளை வாங்க நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!* "எப்படியாவது இந்துக்கள் - ... மேலும் பார்க்க

TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' - வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Vijayஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சி... மேலும் பார்க்க