தா்பூசணியை கீழே போட்டு உடைத்து வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, தா்பூசணியை கீழே போட்டு உடைத்து பழ வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வியாபாரிகள் சிலா் தா்பூசணியில் நிறம் மற்றும் சுவைக்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளை கண்டித்தும், சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரவையின் ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ வியாபாரிகள், தா்பூசணி பழங்களை கீழே போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அருண்குமாா் கூறும்போது, ‘ஒரு டன் தா்பூசணி ரூ. 10,000-க்கு மேல் விற்பனையான நிலையில், உணவுத் துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால், தற்போது ஒரு டன் தா்பூசணி ரூ. 2,000-க்கு விற்பனை ஆகிறது. முதல்வா் இந்தப் பிரச்சினை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா் அவா்.