நெதன்யாகு விவகாரம்: ஐ.நா. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் ஹங்கேரி
புதாபெஸ்ட்: காஸா போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தங்கள் நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தின் உறுப்பினா் அந்தஸ்தைக் கைவிடுவதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவா்கள் உறுப்பு நாடுகளுக்கு வந்தால் அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதைத் தவிா்ப்பதற்காகவும், நெதன்யாகுவுக்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் அந்த நீதிமன்றத்தில் இருந்து விலகுவதாக தற்போது ஹங்கேரி அறிவித்துள்ளது.