வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!
சின்ன திரை நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கும் ஆடுகளம் தொடர், வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஏப். 8ஆம் தேதி திங்கள் கிழமைமுதல் இரவு 10 மணிக்கு ஆடுகளம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்கர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. மேலும், இளம் ரசிகர்களைக் கவரும் வகையில் அடுத்தடுத்து தொடர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை டெல்னா டேவிஸ் - சல்மான் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஆடுகளம் தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடர் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில், பிரைம் டைம் எனப்படும் முக்கிய நேரம் கிடைக்காததால், காத்திருந்து தற்போது ஒளிபரப்பப்படுகிறது.
இத்தொடரில் நாயகியாக நடிக்கும் டெல்னா டேவிஸ் அன்பே வா தொடரின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அபியும் நானும், இலக்கியா, கண்ணான கண்ணே உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.
தனது வசீகரமான தோற்றத்தாலும், துறுதுறு நடிப்பாலும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள டெல்னா, சினிமாவிலும் நாயகியாக நடித்துள்ளார்.

2014-ல் வெளியான விடியும்வரை பேசு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பத்ரா, குரங்குபொம்மை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஆடுகளம் தொடரில் நடித்துவருகிறார். இவருடன் நாயகனாக நடிக்கும் சல்மான், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் நாயகனாக நடித்தவர்.
இதையும் படிக்க | முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?