Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வர சில நாள்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
நியாயமற்ற நடைமுறைகளின்படி, கட்டணம் விதித்ததால் புகார் மனு அளித்த நபருக்கு வணிக வளாகம் 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Chennai VR Mall-ல் நடந்தது என்ன?
புகாரின்படி, சென்னையைச் சேர்ந்த வி.அருண் குமார் என்ற நபர் ஏப்ரல் 26, 2023-ல் வி.ஆர்.மாலுக்கு சென்றுள்ளார். அங்கு, அவரது இருசக்கர வாகனத்திற்கு 1மணி நேரம் 57 நிமிடங்கள் பார்க்கிங் கட்டணமாக 80 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் பார்வையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உரிய பார்க்கிங் வசதி செய்து தரவேண்டியது கட்டாயம் என்ற நிலையில், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பார்கிங் உதவியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அருண் குமார்.
தொடர்ந்து சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சுட்டிக்காட்டி நுகர்வோர் மன்றத்தில் புகார் எழுப்பியுள்ளார் அருண்.
மேலும் அவரது புகாரில், வணிக வளாகத்தில் முதல் 1 மணி நேரத்துக்கு மிகப் பெரிய தொகையாக 50 ரூபாய் வசூலிக்கப்படுவதையும், பார்கிங் உதவியாளர் தன்னிடம் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, வணிக வளாகத்திற்குள் உள்ள பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.
நுகர்வோர் ஆணையம் இதேப்போன்ற, ருச்சி மாலுக்கு எதிரான குஜராத் அரசின் வழக்கு, கொச்சி லூலூ மாலுக்கு எதிரான பாலி வடக்கன் என்பவரது வழக்கு ஆகியவற்றையும் பிற தீர்ப்புகளையும் ஆராய்ந்துள்ளது.
தலைவர் டி. கோபிநாத் தலைமையில், உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி மற்றும் கவிதா கண்ணன் ஆகியோர் தலைமையிலான நுகர்வோர் ஆணையம், வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வாங்கும் வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் அருண் செலுத்திய பார்க்கிங் கட்டணம் உள்பட, மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.10,000 வழங்கவும், வழக்கு செலவுக்காக ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.