செய்திகள் :

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

post image

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை சென்றது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஜோதி, குடும்பச் செலவுக்கான பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வந்தார்.

அப்போது ஜோதியிடம் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஞானசித்தன் என்பவர் பொருள் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் நட்பாக பேசி பழகி வந்திருக்கிறார்கள். ஞானசித்தன், லாரி டிரைவராக உள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்தநிலையில் நேற்றிரவு (1.4.2025) ஜோதியின் வீட்டுக்கு ஞானசித்தன் சென்றார். அங்கு இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஜோதிக்கு போன் வந்திருக்கிறது. போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த ஜோதி, நீண்ட நேரம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அதைக் கவனித்த ஞானசித்தன், யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாய் என கேட்டிருக்கிறார். அதற்கு ஜோதி, என்னுடைய பாய் ஃப்ரெண்ட் எனக் கூறியிருக்கிறார். அப்படியென்றால் நான் யாரு என ஞானசித்தன் கேட்டிருக்கிறார். அதனால் ஜோதிக்கும் ஞானசித்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியிருக்கிறது.

ஆத்திரமடைந்த ஞானசித்தன், அருகில் கிடந்த கல்லை எடுத்து ஜோதியை கொடூரமாக தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ஞானசித்தன், தன்னுடைய தோழி ஜோதியை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறி சங்கர் நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

உதவி கமிஷனர் வெங்கட்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன், விசாரணை நடத்தினார். பின்னர் ஞானசித்தன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சங்கர் நகர் போலீஸார் கைது செய்தனர்.

ஞானசித்தன்

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஜோதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ஜோதி கொலை செய்யப்பட்டதால் அவரின் இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜோதிக்கு சில ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. சம்பவத்தன்று இரவு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரிடம்தான் ஜோதி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மருதமலை : நாளை கும்பாபிஷேகம்; நேற்று வெள்ளி வேல் திருட்டு - சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்

கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்... மேலும் பார்க்க

50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும்... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்பிலான ஹைபிரிட் கஞ்சா; சிக்கிய துணை நடிகை - 3 மாதம் காத்திருந்து தட்டித்தூக்கிய போலீஸ்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா என்ற தஸ்லிமா சுல்தான்(41). இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உலகநாதபுரத்தில் வசித்துவந்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிறோஸ்(26). தஸ்லிமாவும், பிற... மேலும் பார்க்க

குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார். நிஷாந்த் 8 ... மேலும் பார்க்க

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க