டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
ரூ.2 கோடி மதிப்பிலான ஹைபிரிட் கஞ்சா; சிக்கிய துணை நடிகை - 3 மாதம் காத்திருந்து தட்டித்தூக்கிய போலீஸ்
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா என்ற தஸ்லிமா சுல்தான்(41). இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உலகநாதபுரத்தில் வசித்துவந்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிறோஸ்(26). தஸ்லிமாவும், பிறோஸும் கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஓமனப்புழா பகுதியில் உள்ள ரிசாட்டுக்கு காரில் கஞ்சாவுடன் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அந்த பகுதியில் மறைந்து நின்று கண்காணித்தனர். அந்த ரிசாட்டுக்கு காரில் வந்திறங்கிய பிறோஸ், தஸ்லிமா ஆகியோரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் பேக்கில் மூன்று பொட்டலங்களாக வைத்திருந்த மூன்று கிலோ ஹைபிரிட் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், மலையாள நடிகர்கள் ஸ்ரீநாத்பாஸி, ஷைண்டோம் சாக்கோ உள்ளிட்ட நடிகர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்களுடன் பணபரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் தஸ்லிமாவின் மொபைல் போனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் சொல்வதென்ன?
இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் வினோத்குமார் கூறுகையில், "இரு இனங்களைச் சேர்ந்த கஞ்சாக்களை சேர்த்து பயன்படுத்தி ஹைபிரிட் கஞ்சா தயாரிக்கப்படுகிறது. இவை பல மணிநேரம் நீடித்த போதையை வழங்குபவை. சாதாரண கஞ்சாக்கள் கிராம் 300 ரூபாய் என்றால் ஹைபிரிட் கஞ்சா கிலோ பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இபோது பிடிக்கப்பட்ட கஞ்சா சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. ஆலப்புழாவில் சுற்றுலா பகுதிகளை மையமாகக்கொண்டு ஹைபிரிட் கஞ்சா விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்கள் பெங்களூரில் இருந்து வாங்கிவந்து கேரளாவில் மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
தஸ்லிமா சுல்தான் இதற்கு முன்பு எர்ணாகுளத்தில் மசாஜ் பார்லர் நடத்தி வந்தார். அப்போது சிறுமி ஒருவருக்கு போதைபொருள் கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறோஸ் கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிப்பதற்காக மூன்று மாதங்களாக கண்காணித்து வந்தோம். அவர்களின் சொத்து விபரங்களை கணக்கெடுத்து விசாரணை நடத்த உள்ளோம்" என்றார்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த தஸ்லிமா சுல்தான் தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், ஸ்கிரிப் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். அதன்மூலம் மலையாள சினிமாவிலும் தொடர்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து கொச்சியில் வசித்த அவர் மூன்று மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். திருக்காக்கரையில் மசாஜ் செண்டர் நடத்தி வந்தவர் போக்ஸோ வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வசிப்பிடத்தை மாற்றினார். கொச்சி, கோழிக்கோடு, மங்ளூரு நகரங்களில் போதைப்பொருள் கடத்துவதில் முக்கிய இடம் வகித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs