செய்திகள் :

Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer

post image

கைகளால் ஆயிரமாயிரம் பக்கங்கள் வரையப்பட்டு, அதன் பக்கங்களை வேகமாகப் புரட்டி அதை அசையும் காட்சிகளாக உருவாக்கி ஆரம்பிக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் இன்று AI வரை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. அனிமேஷன் திரைப்படங்களின் ஆரம்பம், வளர்ச்சிக் குறித்த அதன் சுவாரஸ்யப் பயணத்தைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அனிமேஷனின் ஆரம்பம்

1800-களின் தொடக்கம்தான் அனிமேஷனின் ஆரம்பக் காலக்கட்டம். ஒரு காகிதத்தில் இரண்டு பக்கமும் படங்களை வரைந்து, அதை வேகமாக சுழற்றும்போது அந்த வரைப்படம் நகர்வதுபோல தெரியும். அது அந்த சமயத்தில் வியப்பாகவும், புதுமையாகவும் பிரபலமாகிறது.

அதுபோல பல வரைபடங்களை கோர்வையான நகரும் காட்சிகளாக ஒருங்கினைத்து ஒரு காட்சி உருவாக்கப்படுகிறது. 'Thaumatrope', 'Phenakistoscope', 'Zoetrope' எனப் பல டிஸ்க்குகளுடன் வரை படங்களை வேகமாகச் சுழற்றி, காட்சிக்கும் கருவிகள் மக்களிடையே பிரபலமாகின.

Animated Films
Animated Films

மெளன திரைப்படங்களின் காலம்

1900 –1920களில் இரண்டு நகைச்சுவையான முகங்களை வைத்து, அதன் ஒவ்வொரு அசைவையும் வரைந்து கேமராக்களில் புகைப்படம் எடுக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களை வேகமாக ஓடவிட்டு காமெடி காட்சிகள் உருவாக்கப்படுகிறது. அதற்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக பியானோ மூலம் பின்னணி இசையுடன் காட்சிகளை ஓடவிடுகிறார்கள். 'Pantomimes Lumineuses', 'Humorous Phases of Funny Faces' என்பவைதான் முதலில் உருவான மெளன அனிமேஷன் திரைப்படங்களாக இருந்தன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கர்ட்டூஸ்டான வின்சர் மெக்கே என்பவர்தான் 1914-ம் ஆண்டு பத்தாயிரம் கார்ட்டூகளை ஒருங்கிணைத்து மெளன அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டார். பிரெஞ்சு, ஜப்பானை சேர்ந்தவர்கள்தான் அனிமேஷன் கலையில் அதிகமான ஈடுபாடுகளைக் காட்டினர். அங்கிருக்கும் கார்ட்டூஸ்கள் அனிமேஷன்களை உருவாக்குவதில் அதீத தீவிரம் காட்டினர்.

அனிமேஷனின் பொற்காலம்

1920–1950 என இந்த முப்பது ஆண்டுகளில்தான் அனிமேஷன் வளர்ச்சியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பிரபலமாக இருக்கும் 'Walt Disney', 'Warner Bros' மற்றும் 'Fleischer Studios' அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அப்போதுதான் வால்ட் டிஸ்னி என்பவரால் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் உருவாக்கப்படுகிறது. அதுதான் அனிமேஷனின் பெரும் பாய்ச்சலாக இருந்தது. மிக்கி மவுஸை வைத்து 'Steamboat Willie' என்ற நகைச்சுவைத் திரைப்படம் பின்னணி இசையுடன் 1928-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Animated Films
Animated Films

வண்ண மயமாகும் அனிமேஷன்கள்

1930-ம் ஆண்டு 'Fiddlesticks', 1932ம் ஆண்டு Flowers and Trees என இரண்டு வண்ணமயமான அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகின்றன. பி ல்வெர்க்ஸ், பார்ட் கில்லட் என்பவர்களால் கருப்பு வெள்ளையில் இருந்த அனிமேஷன்கள் வண்ண மயமாகிறது. 'Snow White and the Seven Dwarfs (1937)', 'Looney Tunes and Merry Melodies (1930)' போன்ற 2D அனிமேஷன் திரைப்படங்களை 'Walt Disney', 'Warner Bros' போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டு தயாரித்து வெளியிடத் தொடங்கின. புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கதைகள், நாவல்கள் அனிமேஷன் திரைப்படங்களாக உருவாக ஆரம்பித்தன.

அனிமேஷன்கள் பல வகை

கைகளால் வரையப்பட்டு உருவாக்கப்படும் அனிமேஷன்:

கைகளில் ஆயிரமாயிரம் அசைவுகளை வரைந்து, ஒவ்வொரு ப்ரேமாக உருவாக்கி, அதை வேகமாக ஓடவிட்டு காட்சிகளாக மாற்றுவதுதாம் பாரம்பரியமான கைகளால் உருவாக்கப்படும் அனிமேஷன். குறிப்பாக இன்று ட்ரெண்டாகியிருக்கும் கிப்லி ஆர்ட் ஸ்டைல் திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. ஹயோ மியாசாக்கி (Hayao Miyazaki) என்ற பிரபல ஜப்பானிய இயக்குநர்தான் ஒரு காட்சிக்கே ஆயிரக் கணக்கில் கார்ட்டூன்களை வரைந்து கிப்லி ஆர்ட்டின் ஸ்டைலில் பல திரைப்படங்களை எடுத்தார்.

Animated Films
ஹயோ மியாசாக்கி திரைப்படங்கள்

அவர் எடுத்த 'My Neighbor Totoro', 'Princess Mononoke', 'Howl's Moving Castle' எனப் பல திரைப்படங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்த திரைப்படங்களாகும். அவரின் 'Spirited Away' திரைப்படம் 2003ம் ஆண்டு சிறந்த அனிமேஷ்ன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. உலகமுழுவதும் மொழிகளைத் தாண்டி கொண்டாடப்பட்ட 'Snow White and the Seven Dwarfs (1937), The Lion King (1994) திரைப்படங்கள் கைகளால் வரையப்பட்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்களாகும்.

பொம்மைகளை வைத்து உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்கள்

இது கொஞ்சம் சுவாரஸ்யமான அனிமேஷன் ஆர்ட்டாகும். கதாபாத்திரங்களை பொம்மைகளாக உருவாக்கி, அதற்கான கதை களத்தையும் சிறு உலகமாக (miniature) கைகளால் செய்து, அவைகளை இன்ச் இன்ச்சாக நகர்ச்சி அசைவுகளை ஏற்படுத்தி அதைப் புகைப்படங்கள் எடுத்து, அதை ஒருங்கிணைத்து வேகமாக ஓடவிட்டு உருவாக்குவது இந்த 'Stop-Motion Animation' திரைப்படங்களாகும். இதை ஸ்டுஆர்ட் பிளாக்டன் மற்றும் ஆல்பர்ட் ஸ்மித் என்பவர்கள் 'The Humpty Dumpty Circus' படத்தை 1898ம் ஆண்டே உருவாக்கினர்.

Animated Films
Animated Films

இது பெரிதாக பிரபலமடையவில்லை என்றாலும், இதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இன்று வரை 'Laika' மற்றும் 'Aardman' போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வகை அனிமேஷன் திரைப்படங்களில் இன்னமும் கவனம் செலுத்தி வருகின்றன. The Nightmare Before Christmas (1993), Wallace & Gromit: The Curse of the Were-Rabbit (2005), Guillermo del Toro's Pinocchio (2022) உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருக்கின்றன.

2D டிஜிட்டல் திரைப்படங்கள்

2D டிஜிட்டல் தொழில்நுட்பம் அனிமேஷனில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆர்ட்டிஸ்டுகள் பல மணி நேரம், ஆயிரமாயிரம் பக்கங்கள் வரைந்து உருவாக்க வேண்டிய அனிமேஷன் காட்சிகளை சில மணி நேரங்களில் முடித்துக் கொடுத்தது. 'Adobe Animate', 'Blender', 'Toon Boom Harmony', மற்றும் 'TVPaint' போன்ற 2D டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பு அனிமேஷன் துறையை அசுர வளர்ச்சியை நோக்கி எடுத்துச் சென்றது. அவற்றின் மூலம் உருவாகிய 'The Simpsons', 'Rick and Morty', 'Arcane' திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Adobe Animate

3D அனிமேஷனின் காலம்

2D அனிமேஷனில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த பின்பு, கணினியின் காலம் கோலோச்ச தொடங்கிய பின்பு 3D அனிமேஷன்கள் உருவாகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கணினி ஆய்வாளர் மற்றும் அனிமேஷன் ஆராய்ச்சியாளரும், 'Pixar' நிறுவனத்தின் இணை நிறுவனருமான எட்வின் கேட்முல் என்பவர் 1972ம் ஆண்டு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் அனிமேஷனில் 3D தொழில்நுட்பத்தை அனிமேஷனில் கொண்டு வருகிறார். 1976-ம் ஆண்டு 'Futureworld' என்ற திரைப்படத்தில் இந்த 3D தொழில்நுட்பம் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது.

'Pixar' தயாரிப்பு நிறுவனம்தான் 3D தொழில்நுட்பத்தை அனிமேஷன் திரைப்படங்களில் பயன்படுத்த தீவிரம் முயற்சிகள் எடுத்து சாதித்தது. அந்நிறுவனத்தின் 'RenderMan' சாஃப்ட்வேர்தான் 3D தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற அஸ்திவாரமாக இருந்தது.

RenderMan software | Toy story movie

அதைப் பயன்படுத்தி ஜான் லெஸிட்டர் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான 'Toy Story' திரைப்படம்தான் முதன் முதலாக வெளியாக முழுநீள 3D அனிமேஷன் திரைப்படமாகும். இப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதையடுத்து 'DreamWorks', 'Disney' நிறுவனங்கள் 3D அனிமேஷனில் கால் பதித்தனர். குறிப்பாக, Shrek (2001), Finding Nemo (2003) போன்ற திரைப்படங்கள் மொழிகளில் தாண்டி, இங்கு தமிழிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

MoCap அனிமேஷன்

இது மோஷன் கேப்சர் அனிமேஷன் (Motion Capture (MoCap) தொழில்நுட்பம். இதுதான் இன்றை அனிமேஷன் உலகில் உச்சமாக இருக்கிறது. நடிகர்களின் உடைகளில், உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தின் தசைகளில், கை, கால் உடல் முழுவதுமான தசை அசைவுகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டு, அதன் அசைவுகளை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. அந்த பதிவுகளைக் கொண்டு Blender, Maya, மற்றும் Unreal Engine போன்ற சாப்ட்வேர்கள் மூலம் தத்ரூபமான கிராஃபிக்ஸ் கதாபாத்திரங்களை வரைந்து காட்சிகளை உருவாக்குவதுதான் இந்த மோஷன் கேப்சர் அனிமேஷன் திரைப்படங்கள்.

மோஷன் கேப்சர் அனிமேஷன் திரைப்படங்கள்

The Polar Express (2004), King Kong (2005), The Lord of the Rings Trilogy (2001-2003), Avatar, Planet of the Apes Trilogy (2011-2017) உள்ளிட்ட இன்றைய அனிமேஷன் திரைப்படங்கள் எல்லாம் இந்த மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு யுகம் ஆரம்பம்

எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் சினிமா துறைதான் மிக வேகமாக உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் இப்போது அசுர வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் சினிமா துறைதான் மிக வேகமாக உள்வாங்கி மிகப்பெரிய அளவில் பயன்படுத்தத் தயாராகி நிற்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தி முழு திரைப்படத்தையும் உருவாக்கிவிடும் அளவிற்கு பல செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள் புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கின்றன.

AI

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை கச்சிதமான வரிகளில் தெளிவாக எழுதினாலே, அதைக் கொண்டு VFX, CGI காட்சிகளை உருவாக்கிவிடலாம். டப்பிங்கில் நடிகர்களின் உதடு அசைவுகளை மாற்றுவதில் ஆரம்பித்து, நடிகர்களை 'VFX' -யில் உயிரோட்டத்துடன் உருவாக்கும் அளவிற்கு செயல்திறனைக் கொண்டுள்ளன இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள். நடிகர்களின் வயதைக் குறைப்பது, முகங்களை மாற்றி அமைப்பது என பல வேலைகளை திறன் மிகுந்ததாகச் செய்து முடித்துவிடுகின்றன.

Sora, Runway, Disney’s FaceDirector, Nuke, Ziva VFX, DeepMotion, Autodesk Maya, Adobe Sensei, NVIDIA GauGAN, Synthesia, DeepBrain உள்ளிட்ட பல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் திரைப்படங்களில் அனிமேஷன் வேலைகளை செய்து முடித்துவிடுகின்றன. எதிர்காலத்தில் அனிமேஷன் திரைப்படங்களை இந்த செயற்கை நுண்ணறிவைக் கொண்டே உருவாக்கிடலாம் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

தொழில் நுட்பங்கள் புதிதுபுதிதாக வளர்ச்சி அடைந்து சென்றாலும் படைப்பாளர்களே என்றும் முதன்மையானவர்கள். படைப்பாளர்களின் கற்பனையை செயலாக்க, வேலைகளைச் செயல் திறன் மிகுந்ததாகவும், துரிதமாகவும் செய்வதற்கே இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அவற்றால் ஒருபோதும் படைப்பாளர்களை விழுங்கிவிடமுடியாது.

வீடு தேடி வந்த அனிமேஷன் திரைப்படங்கள்

அனிமேஷன் திரைப்படங்களை மொழிகள் கடந்து உலகெங்கிலும் பிரபலமடையச் செய்ததற்கு தொலைக்காட்சிக்குதான் பெரிய பங்கு உள்ளது. பல அனிமேஷன் தொடர்களை, திரைப்படங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்ற பிறகே அனிமேஷன் திரைப்படங்கள் கவனம் பெறத் தொடங்கி பிரபலமாகின. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது கடந்து, மொழி கடந்து அனிமேஷன் திரைப்படங்களைக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் டெலிவிஷன்தான் காரணம். முதன் முதலில் டெலிவிஷனுக்கு வந்த அனிமேஷன் தொடர் 'Crusader Rabbit (1949-1951)'. அலெக்ஸ் ஆண்டர்சன், ஜே வார்ட் என்பவர்கள்தான் அதை சாத்தியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் வென்ற திரைப்படங்கள்

ஆஸ்காரும், அனிமேஷன் திரைப்படமும்

ஆஸ்கர் விருதுவிழாக்களில் அனிமேஷன் திரைப்படங்கள் ரொம்ப காலமாகவே அங்கீகாரம் பெறாமலே இருந்தன. 2002-ம் ஆண்டுதான் முதன்முதலில் முழு நீள அனிமேஷன் திரைப்படத்திற்கென தனி பிரிவு ஒதுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. 'Shrek' என்ற திரைப்படம்தான் முதன்முதலில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கரை வென்ற அனிமேஷன் திரைப்படமாகும்.

2003-ம் ஆண்டு ஹயோ மியாசாக்கி எடுத்த திரைப்படமான 'Spirited Away' சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. இதையடுத்து Spider-Man: Into the Spider-Verse, Guillermo del Toro's Pinocchio, Flow உள்ளிட்ட பல அனிமேஷன் திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் விருதகளை வென்று கொண்டிருக்கின்றன. Nausicaä of the Valley of the Wind

ஜப்பானிய, கொரியன் அனிமேஷன் திரைப்படங்களின் ஈர்ப்பு

ஜாப்பன், கொரியன் அனிமேஷன் திரைப்படங்கள்தான் உலகமுழுவதும் அதிகமான ரசிகர்கள் பட்டாளங்களைக் கொண்டுள்ளது. 'Spirited Away', 'Akira', 'Your Name', 'My Neighbor Totoro', 'Grave of the Fireflies', 'Nausicaä of the Valley of the Wind', Naruto அனிமேஷன் படங்கள், தொடர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

அனிமேஷன் திரைப்படங்கள்

அனிமேஷன் திரைப்படங்கள் நம் குழந்தைத் தனத்தை உயிர்ப்புடன் வைத்து மனதை இலகுவாக்கும் திரைப்படங்களாகும். அளவற்ற கற்பனைகள், நம்பிக்கை ஊட்டும் கதைகள், வியக்க வைக்கும் கற்பனை உலகு, சிறு சிறு வாழ்க்கைத் தத்துவங்கள், மனிதத்தை கற்றுக் கொடுக்கும் கதைகள் என ஆனந்தத்துடன் ஆச்சரியத்துள்ளாகும் தன்மை கொண்டவை அனுமேஷன் திரைப்படங்கள்.

உங்களுக்குப் பிடித்த, நீங்கள் வியந்து பார்த்த அனிமேஷன் திரைப்படங்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Val Kilmer: உடல்நலக் குறைவால் காலமான பேட்மேன் நடிகர்; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (ஏப்ரல் 2 ) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 65. 1984 ஆம் ஆண்டு வெளியான ‘Top Secret’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வால் கில்மர்.... மேலும் பார்க்க

Avengers Doomsday: சங்கமிக்கும் அவெஞ்சர்ஸ்; டூம்ஸ்டேவின் நடிகர் குழு அறிவிப்பு

மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த பெரிய அத்தியாயம் தான் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே(AVENGERS : DOOMSDAY)'. மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சின் ஐந்தாவது அவெஞ்சர்ஸ் திரைப்படமான இது அடுத்தாண்டு மே 1-ம் தேதி திரையரங்க... மேலும் பார்க்க

Shigeki Awai: புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் - அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்

புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேட்டர் மற்றும் இயக்குநர் ஷிகெகி அவாய் தனது 71 வயதில் மரணமடைந்துள்ளார். ஷிகெனோரி அவாய் என்றும் அழைக்கப்படும் இவர், 1980 முதல் அனிமேஷன் துறையில் குறிப்பிடத்தக்க நபராக பணியாற்றுகி... மேலும் பார்க்க

Mickey 17 Review: காத்திர அரசியல் பேசும் சயின்ஸ் பிக்ஷன்; `பாராசைட்' இயக்குநரின் அடுத்த படைப்பு!

2054-ம் ஆண்டு நிஃப்ல்ஹெய்ம் என்ற கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற, கென்னத் மார்ஷல் (மார்க் ருஃபாலோ) என்ற தோல்வியுற்ற பணக்கார அரசியல்வாதி ஒரு திட்டத்தைத் தீட்டுகிறான். அதற்காகப் பல்வேறு துறைகளில் ஆட்கள... மேலும் பார்க்க

Oscars 2025 `ஒரே இரவில் 4 விருதுகள்; நெகிழ்ச்சியூட்டிய ஆஸ்கர் உரை'- அனோரா இயக்குநர் குறித்து ராஜமௌலி

தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, 2025 அகாடெமி அவார்ட்ஸில் அனோரா திரைப்படத்துக்காக விருதுபெற்ற சீன் பேக்கரை வாழ்த்தியுள்ளார். பாலியல் தொழிலாளியின் காதல் குறித்த காமெடி டிராமா படமான அனோரா, 5 ஆஸ்கர் ... மேலும் பார்க்க

Oscars 2025 Winners List: DUNE to CONCLAVE... ஆஸ்கர் விருது விழாவில் வென்ற திரைப்படங்கள் இவைதான்!

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஆஸ்கர் வி... மேலும் பார்க்க