குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
Avengers Doomsday: சங்கமிக்கும் அவெஞ்சர்ஸ்; டூம்ஸ்டேவின் நடிகர் குழு அறிவிப்பு
மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த பெரிய அத்தியாயம் தான் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே(AVENGERS : DOOMSDAY)'. மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சின் ஐந்தாவது அவெஞ்சர்ஸ் திரைப்படமான இது அடுத்தாண்டு மே 1-ம் தேதி திரையரங்கங்களில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் நடிகர்கள் குழுவை கடந்த வாரம் சமூக வலைதளங்களில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் அறிவித்தது மார்வெல். ஒவ்வொரு நடிகருக்கும் தனி இருக்கை வைத்து அதில் அவர்களது பெயரினைக் காட்டி நடிகர்களை அறிவித்துள்ளது நிறுவனம்.

இதில் மிக முக்கியமாகப் பலராலும் கவனிக்கப்பட்டது தோர் கதாபாத்திரத்திற்கு பெயர் போன கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் லோக்கி கதாபாத்திரத்திற்கு பெயர் போன டாம் ஹிடுல்ஸ்டன்தான்.
தோர் பொறுத்தவரை லோக்கி இறந்துள்ளதாகவே நினைத்து வரும் நிலையில் இவர்களது சந்திப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். மேலும் புதிய கேப்டன் அமெரிக்காவான சேம் வில்சன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆண்டனி மேக்கி இத்திரைப்படத்தில் நடிக்கிறார்.
மேலும் பிரபல அவெஞ்சரான ஆன்ட்-மேன் கதாபாத்திரத்தில் நடித்த பால் ரட்டும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். அவருக்கு மட்டும் சிறிய இருக்கை வைத்து நையாண்டித்தனமாக அறிவித்துள்ளது மார்வெல். இத்துடன் முக்கிய அவெஞ்சர்ஸ் அறிவிப்பு முடிந்துள்ளது.
லெட்டிஷியா ரைட்/ஷூரி , வின்ஸ்டன் டியூக்/இம்பாக்கூ , டெனோச் ஹூர்ட/நேமர் என வக்கான்டாவைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் திரும்புகின்றனர் . ஷாங்-சி திரைப்படத்திற்குப் பிறகு பெரிதாக வேறு எந்தத் திரைப்படத்திலும் தலைக்காட்டாத சிமு லியூ இந்தத் திரைப்படத்தில் திரும்புகிறார்.
மே மாதம் வெளியாகவிருக்கும் `தன்டர்போல்ட்ஸ்' திரைப்படத்தில் வரும் டேவிட் ஹார்பர்/ரெட் கார்டியன் , ஃபிளோரன்ஸ் பக்/ எலினா, ஹான்னா ஜான்/கோஸ்ட் ,ராபர்ட் ரெனால்ட்ஸ்/சென்ட்ரி,வியாட் ரசல்/ஜான் வாக்கர் ,செபாஸ்டியன் ஸ்டான்/வின்டர் சோல்ஜர் அனைவரும் அப்படியே களம் காண்கின்றனர் .

கெல்சி கிராம்மர்/பீஸ்ட் , பாட்ரிக் ஸ்டீவர்ட் /பிரஃபஸர் X , ஐயன் மெக்கல்லன் /மேக்னட்டோ , ஆலன் கம்மிங்/ நைட் கிராவ்லர், ரெபெக்கா ரொமிஜின் /மிஸ்டிக், ஜேம்ஸ் மார்ஸ்டன்/சைக்ளோப்ஸ், சானிங் டாட்டம் /கேம்பிட் என X-மென் குழுவினர் முதல் முறை மார்வெல் யூனிவர்சில் களம் காண்கின்றனர். இதில் பலர் பழைய X-மென் திரைப்படத்தில் தோன்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டூம்ஸ்டே திரைப்படத்திற்கு ஆழமானதொரு அஸ்திவாரம் அமைக்கவிருக்கும் திரைப்படம் தான் 'ஃபென்டாஸ்டிக் 4 :ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் (FANTASTIC FOUR:FIRST STEPS)' . வரும் ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் வரும் பெட்ரோ பாஸ்கல்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக், எபான் மோஸ்/ தி திங்க் , வனெஸா கிர்பி/ இன்விஸிபிள் கேர்ல் , ஜோசஃப் குவின்/ ஹியூமன் டார்ச் ஆகியோர் டூம்ஸ்டேவில் களமிறங்குகின்றனர். இது இரண்டு திரைப்படங்களுக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது .

டூம்ஸ்டேவின் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராபர்ட் டவுனி ஜூனியரின் டூம் கதாபாத்திரத்தையும் வீடியோவின் முடிவில் அறிவித்துள்ளனர். அவரே தோன்றியதும் கூடுதல் சிறப்பு .
இதுவரை பார்க்காத 'X- மேன்', 'அவெஞ்சர்ஸ்', 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' கூட்டணி இத்திரைப்படத்தில் நடக்கவிருப்பது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டுபோகிறது. 20 நடிகர்களுக்கு மேல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இனியும் பலர் இந்த வரிசையில் இணைவார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.