தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் திங்கள்கிழமை நள்ளிரவில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
நைட்ரஜன் வாயுவை சுவாசித்ததே உயிரிழப்புக்கான காரணமென கூறப்படுகிறது. மேலும் பலர் வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.