7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.
இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதில் விராட் கோலி 6 பந்துகளில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அர்ஷத் கான் வீசிய பந்தில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் ஆனார்.
சின்னசாமி திடலில் விராட் கோலி அதிகமாக ரன்களை குவித்திருக்கிறார். இருப்பினும் இன்று அதிக எதிர்பார்ப்பு இருந்தும் 7 ரன்களில் ஆட்டமிழந்தது போட்டியைக் காண வந்திருக்கும் கோலி ரசிகர்கள் சோகமடைந்தனர்.
கட்ந்த போட்டியிலும் கோலி 30 பந்துகளில் 31 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார்.
4 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி 27 ரன்கள் எடுத்துள்ளது.