கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை
கோப்பையை வெல்வது மட்டும் மீதமிருக்கிறது: நிதீஷ் குமார் ரெட்டி
கோப்பையை வெல்வது மட்டுமே மீதமிருப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டி கூறியதென்ன?
கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்ட நிலையில், இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வெல்வது மட்டுமே முடிவடையாத வேலையாக இருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சச்சின் பதிவை 1,000 முறை படித்த ஷஷாங் சிங்..! இன்ஸ்டா பயன்பாட்டினை குறைக்க அறிவுறுத்திய கேப்டன்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், தனிப்பட்ட எந்த ஒரு இலக்குகளையும் நான் ஒருபோதும் நிர்ணயித்துக்கொண்டது கிடையாது. கடந்த சீசனிலும் சரி, இந்திய அணிக்காக விளையாடிபோதிலும் சரி எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட இலக்குகளும் இல்லை. சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்வது மட்டுமே முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது. நாங்கள் ஒரு அணியாக பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளோம். ஆனால், எங்களது இலக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதே.
எனது நாட்டுக்காகவும், ஐபிஎல் தொடரிலும் நான் அடைந்துள்ள முன்னேற்றத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடர்ச்சியாக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய ஆட்டத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ள தொடங்கிவிட்டார்கள். எனது விளையாட்டை பாராட்டவும் செய்கிறார்கள். அதனால், அதிகம் யோசிக்காமல் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை நேசித்து விளையாட விரும்புகிறேன் என்றார்.