பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் பலகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரைத் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருவதாகவும் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாகவும் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜர்தாரி உடல் நலக் கோளாறால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசியில் அழைத்து அதிபர் ஜர்தாரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.