40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்
இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு நாள் ‘கடை செல்லா’ போராட்டத்தை எதிா்க்கட்சியினா் புதன்கிழமை நடத்தினா்.
அந்த நாளில் யாரும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்காமல் இருப்பதன் மூலம் அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க அவா்கள் அழைப்பு விடுத்தனா். இது, நாட்டின் பொருளாதாரத்தைக் குலைக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டிய அரசு, இழப்பை சந்திக்கும் நிறுவனங்கள் போராட்டக்காரா்களிடம் இழப்பீடு கோரலாம் என்று அறிவித்துள்ளது.