காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!
தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்தால், தண்ணீரைத் தேடி அலைந்து திரியும் வன விலங்குகளுக்கு வனத் துறையினர் வனவிலங்குகளுக்கு வனப் பகுதிகளுக்குள் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
உணவு, தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்குள் படையெடுத்து எடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் காய்கறிகள், உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சூறையாடுவதும், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்களை உண்டு சொல்வதும் நடைபெற்று வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தண்ணீருக்காக குட்டியுடன் வந்த மூன்று காட்டு யானைகள் கோவை தடாகம் பகுதியில் உள்ள பொன்னூத்து அம்மன் கோயில் அருகே உள்ள வனத் துறையினர் வைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் தாகம் தீர்க்க தண்ணீர் அருந்திக் கொண்டு இருந்தது.
அப்போது, அங்கு வந்த ஒரு காகம், தொட்டியில் மேல் அமர்ந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த யானைகள் பின்வாங்கின. அந்தக் காட்சிகள் அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் விடியோ பதிவு செய்து இருந்தார்.
அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரிய அளவில் உருவம் கொண்ட யானையைக் கண்டு வன விலங்குகளும், மனிதர்களும் அஞ்சுகின்ற நிலையில் காகத்தைக் கண்டு யானைகள் அஞ்சிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.