பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!
ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார்.
இந்த நிலையில், தில்லியிலுல்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில், ஹைதராபாத் இல்லத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.