செய்திகள் :

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்திய பொருள்களுக்கு 100 சதவிகிதத்துக்கு அதிகமான வரிவிதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் நிலையில் உள்ளன. அதிபர் டிரம்ப் குறிப்பாக அலுமினியம், இரும்பு மீது அதிக வரியை விதித்திருக்கிறார்.

மருந்துகள், மின்சார பொருள்கள் மீதும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வருகிற 4 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இதையும் படிக்க: எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

வரிவிதிப்பால் பாதிப்படையும் நாடுகள்

  • சீனா

  • ஐரோப்பிய ஒன்றியம்

  • மெக்சிகோ

  • வியத்நாம்

  • அயர்லாந்து

  • ஜெர்மனி

  • தைவான்

  • ஜப்பான்

  • தென்கொரியா

இதையும் படிக்க: பேட்மேன், டாப்கன் திரைப்பட புகழ் வால் கில்மர் காலமானார்!

  • கனடா

  • இந்தியா

  • தாய்லாந்து

  • இத்தாலி

  • ஸ்விட்சர்லாந்து

  • மலேசியா

  • இந்தோனேசியா

  • ஆஸ்திரேலியா

  • ஆர்ஜென்டீனா

  • பிரேசில்

  • துருக்கி

  • பிரிட்டன்

இதையும் படிக்க: ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!

வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அ... மேலும் பார்க்க

‘காஸாவின் பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்’ -இஸ்ரேல்

ஜெருசலேம்: காஸா முனையில் பெரிய அளவிலான பகுதிகளைக் கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா். இது குற... மேலும் பார்க்க

இலங்கை: பிரிட்டன் தடைக்கு எதிா்வினை

கொழும்பு: விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப்போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா (படம்) உள்ளிட்ட மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரிட்டன் அரசு கடந்த... மேலும் பார்க்க

துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

அமெரிக்கா-ஈரான் மோதலால் பேரழிவு! -ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கொவ் ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்க... மேலும் பார்க்க