இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
வாஷிங்டன்: இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஏப். 3) அறிவித்துள்ளாா். அதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி வித்தித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.