விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!
ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்களுடன் இணைந்து ஹைதராபாத்தை சுற்றிய அவர் நேற்று (மார்ச். 31) இரவு விமான நிலையம் செல்வதாக இருந்தது.
டாக்ஸியில் உடன்வந்த நண்பர்கள் இறங்கியபின்னர், அவர் விமான நிலையத்திற்கு அதே டாக்ஸியில் சென்றார்.
மமிடிபள்ளி பகுதி அருகே சென்றபோது ஆளில்லாத இடத்தில் டாக்ஸியை நிறுத்திய ஓட்டுநர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
மேலும், அதே இடத்தில் அவரை இறக்கிவிட்ட ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார்.
பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய டாக்ஸி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.