சிங்கம் வந்துவிட்டது: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா!
'வருமான வரி முதல் ஆதார் கார்டு வரை' - இன்று முதல் அமலுக்கு வரும் 7 நிதி அறிவிப்புகள்!
இன்றிலிருந்து 2025-26 புதிய நிதியாண்டு தொடங்குகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்றிலிருந்து பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம்.
முதல் மற்றும் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் கடந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய வருமான வரி முறையை பின்பற்றினால் ரூ.75,000 நிரந்தர கழிவாக கிடைக்கும். ஆக, ரூ.12,75,000 வரை வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது.

நீண்ட நாட்களாக பயன்பாட்டில்லாத யு.பி.ஐ இன்றிலிருந்து ரத்து செய்யப்படுகிறது.
யூனிஃபைட் பென்சன் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கானது ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் 25 ஆண்டுகள் அனுபவமுள்ள மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுடைய அடிப்படை சம்பளத்தில் 50 சதவிகிதத்தை பென்சனாக பெறுவார்கள்.
வெளிநாட்டு பயணம், முதலீடுகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு டி.சி.எஸ் விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு டிவிடண்ட் வருமானம் இனி கிடைக்காது.
வயதானவர்களின் வாடகை வருமானம் மற்றும் வட்டி சம்பந்தமான வருமானத்திற்கான டி.டி.எஸ் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் கணக்குகளுக்கு இனி KYC கட்டாயம். வாரிசுதாரர்கள் சம்பந்தமான தகவல்கள் மீண்டும் சரிபார்க்கப்படும்.