நெருக்கடியில் தக்காளி விவசாயிகள்: பாஜகவை விமர்சித்த அகிலேஷ்!
ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று தரிசனம் செய்தார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 6) ராமேஸ்வரம் வந்திருந்தார்.
பாம்பன் ரயில் பாலத்தை கொடியசைத்து திறந்துவைத்த பிரதமர் மோடி, பகல் 12.45 மணிக்குமேல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்து தீர்த்தம் வழங்கப்பட்டது.
பிரதமர் தரிசனம் மேற்கொள்வதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தீர்த்தத்தில் நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமா் வருகையின் காரணமாக 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அந்தப் பகுதி முழுக்க டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.