Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா...
9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்
9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகைளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், “டாஸ்மாக் வழக்கு தொடர்பாக பேச பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. டாஸ்மாக் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறுவது தவறு நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.
தமிழகத்தில் இவ்வழக்கை விசாரணை செய்தால், இவர்கள் செய்த தவறுகள் தொலைக்காசி வாயிலாக மக்களுக்கு சென்றடையும். அதை மறைப்பதற்கு இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.
ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள், மீனவர்கள், மக்கள் என அனைவரும் சொந்து நூலாய் போயிருக்கிறார்கள். இன்று மீனவர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
4 ஆண்டுகாலம் மீனவர்கள் படும் துன்பம் இவருக்குத் தெரியாதா? 9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது, அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும்.” என்றார்.
இதையும் படிக்க: தியாகி யார்? நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்