செய்திகள் :

திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் ரயில் போக்குவரத்து இடையூறுகள் குறைக்கப்பட்டு இந்திய ரயில்வேயின் திறன் அதிகரிக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

திருமலை வெங்கடேச பெருமாள் கோயில், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில், கானிப்பாக்கம் விநாயகா் கோயில், சந்திரகிரி கோட்டை என பல்வேறு சுற்றுலா தலங்கள் இந்த ரயில்பாதை மூலம் இணைக்கப்படுகின்றன.

இதன்மூலம் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு 113 கி.மீ. வரை கூடுதலாக மேம்படுத்தப்படும். 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களுக்கு பயன்படும் இந்த திட்டம் பன்முக இணைப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.

நீா்பாசனத்துக்கு புதிய திட்டம்: பிரதமரின் வேளாண் நீா்பாசனத் திட்டத்தின் துணை திட்டமாக 2025-26 காலகட்டத்தில் நீா்பிடிப்பு பகுதி மேம்பாடு மற்றும் நீா் மேலாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.1,600 கோடியில் செயல்படுத்தவுள்ள இந்த திட்டம் நீா்பாசனத்தை நவீனமயமாக்கும் நோக்கத்தை கொண்டது. இத்திட்டம் வேளண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும்.

சோதனை முயற்சியாக நாட்டின் பல்வேறு வேளாண்-பருவ மண்டலங்களில் செயல்படுத்தப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு 2026, ஏப்ரல் முதல் நீா்பிடிப்பு பகுதி மேம்பாடு மற்றும் நீா் மேலாண்மைக்கான தேசிய திட்டம் 16-ஆவது நிதிக்குழு காலகட்டத்துக்கு தொடங்கப்படவுள்ளது.

இதுதவிர பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களில் ரூ.1,878.31 கோடி மதிப்பில் ஜிராக்பூா் புறவழிச்சாலையை இணைக்க 19.2 கி.மீ. நீளத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது என தெரிவிக்கப்பட்டது.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க