Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்ப...
உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர்.

அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நிகில், பிரியங்காவின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
நிகில் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்காவின் சகோதரர் மோஹித், ``அந்தப் பூங்காவில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. என் சகோதரி மிகவும் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால்தான் அவர் உயிர் இழந்தார். இப்போதுதான் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி, ரோலர் கோஸ்டர் உட்பட, பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டிருக்கிறது." என்றார். விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.