ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகே விபத்து; என்ன நடந்தது?
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது படங்களில் நடிக்காமல் மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த ஐஸ்வர்யா ராய் இப்போது பொதுநிகழ்ச்சிகளில் கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான காரை அதன் டிரைவர் அந்தேரி ஜுகு பகுதியில் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டிற்கு அருகில் ஓட்டிச்சென்றபோது அதன் மீது பெஸ்ட் பஸ் மோதிக்கொண்டது.
காரின் பின்புறமாக பஸ் இடித்துக்கொண்டது. அந்நேரம் காரில் ஐஸ்வர்யா ராய் இல்லை. விபத்து நடந்தவுடன் பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து காரில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டார்.
டிரைவரை தாக்கிய பவுன்ஷர்
அந்நேரம் அருகில் உள்ள பங்களாவில் இருந்த செக்யூரிட்டி கார்டு வந்து பஸ் டிரைவரை திட்டி தாக்கியுள்ளார். காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. பஸ் டிரைவரை அடித்த பவுன்ஷர் எனப்படும் செக்யூரிட்டி கார்டு அமிதாப்பச்சன் வீட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஸ் டிரைவர் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வரும் முன்பு செக்யூரிட்டி கார்டு வேலை செய்த பங்களாவை சேர்ந்த சூப்பர்வைசர் வந்து பஸ் டிரைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இப்பிரச்னையை மேற்கொண்டு பெரிதாக்கவேண்டாம் என்று கருதி அடித்த செக்யூரிட்டி கார்டு மீது பஸ் டிரைவர் போலீஸில் புகார் செய்யவில்லை. பஸ் செல்ல வேண்டிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
