பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று(மார்ச் 30) காலை 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.