செய்திகள் :

Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

post image

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மோகன்லால் இது தொடர்பாக மன்னிப்புக் கேட்கவுள்ளதாக மலையாள இயக்குநரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி தெரிவித்துள்ளார்.

படத்தின் டிஸ்கிளைமரில் அனைத்துக் காட்சிகளும் கற்பனையானவை எனக் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட கலவரம் சார்ந்த காட்சிகள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸை இழிவுபடுத்துவதாக வலதுசாரி ஆதரவாளர்கள் திரைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எம்புரான்

எம்புரான் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இந்த பிரச்னை பெரிதாக வளர்ந்தது. திரைப்படக் குழுவினர் தாமாக முன்வந்து படத்தில் சில காட்சிகளை நீக்குவதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வில்லனின் பெயரையும் மாற்றுவதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 29ம் தேதி மேஜர் ரவி சமூக வலைதளங்களில் எம்புரான் படத்தின் மீதான விமர்சனங்கள் பற்றி பேசினார். இதற்கு முன்பு சிலர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ லேப்டினன்ட் கர்னல் பட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் இன்னும் Empuraan பார்க்கவில்லை

மேஜர் ரவி பேசியதாவது, "ராணுவத்தில் உள்ள எனது நண்பர்களிடமிருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன, அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் மோகன்லாலின் லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

மோகன்லாலின் பதவியை இந்த பிரச்னையுடன் இணைக்க வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை." எனக் கூறியுள்ளார்.

ரவி, மோகன்லால்

மோகன்லாலுக்கு ஆதரவாக, "அவர் கதையில் குறுக்கிடுவதே இல்லை. ஒருமுறை கதை கேட்பதுடன் சரி, அதில் எந்த மாற்றமும் வேண்டுமெனக் கேட்கமாட்டார். அவர் எம்புரான் படத்தை இன்னும் பார்க்காமல் இருக்கலாம், ஏனென்றால் கீர்த்தி சக்ரா படத்தையும் அவர் ரிலீஸுக்கு முன்பு பார்க்கவில்லை. இந்த சர்ச்சையால் அவர் மிகவும் வேதனையடைந்துள்ளார். நீங்கள் நான் கூறுவதை நம்ப வேண்டும்" என்றும் பேசியுள்ளார் ரவி.

மேலும் ரவி படத்தில் 26 காட்சிகள் ஏற்கெனவே நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். "மோகன்லால் ஏதாவது செய்திருந்தால் அதனை அவர் நியாயப்படுத்த வேண்டும். ஆனால் படத்தில் உண்மையான பிரச்னை அவர் வருவதற்கு முன்பே நிகழ்கின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் மீது விமர்சனம்

நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜையும் (மேஜர் ரவியின் ராணுவ படத்தில் நடித்துள்ளார்) நடிகரும் கதாசிரியருமான முரளி கோபியையும் தீவிரமாக விமர்சித்துள்ளார் மேஜர் ரவி.

பிரித்விராஜ் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை அதிக கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும் என்றும், முரளி கோபி இதனை ஆரம்பத்தில் இருந்தே சித்தரித்திருக்க வேண்டும் என்றும் ரவி கூறியுள்ளார்.

"முரளி என் நண்பர். ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்து முழு சம்பவத்தையும் சித்தரித்திருக்க வேண்டும். எப்படி ஒரு வாகனம் 52 பேருடன் எரிக்கப்பட்டது என்பதைக் காட்டியிருக்க வேண்டும். அதுக் காட்டப்பட்டிருந்தால், இந்த சர்ச்சை எழுந்திருக்காது. இந்து-முஸ்லீம் வன்முறையை மட்டும் தேர்ந்தெடுத்து சித்தரிப்பது வகுப்புவாதம், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார் மேஜர் ரவி.

எம்புரானின் தொடக்கக் காட்சிகள் ஒரு ரயிலில் தீப்பிடிப்பதையும், பெண்கள், குழந்தைகள், சந்நியாசிகள் உள்ளிட்ட பயணிகள் எரிந்து மரணிப்பதையும் ஒரு சோகப்பாடலின் பின்னணியில் காட்சிபடுத்தியிருக்கின்றனர். ஆனால், தீ எப்படிப் பற்றியது என்பதைக் காட்சிபடுத்தாதற்கு வலதுசாரி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது ஒரு விபத்து போன்று இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் இந்தப் படம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், திரைப்பட சான்றிதழ் வாரியத்திலிருந்து அந்த உறுப்பினர்கள் நீக்கப்பட வேண்டும் என மேஜர் ரவி தெரிவித்துள்ளார்.

Empuraan: ``என் மகனை பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள்; இது தாயின் வலி'' - ப்ரித்விராஜின் தாயார் வேதனை

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்திருக்கும் `எம்புரான்' படத்திற்கு சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவ... மேலும் பார்க்க

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்'. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்' படத்தின் ... மேலும் பார்க்க

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 ... மேலும் பார்க்க

L2 Empuraan: ''லூசிஃபர் படத்தைப் பற்றி சிரஞ்சீவி சார்கூட நடந்த உரையாடல்'' - ப்ரித்விராஜ் ஷேரிங்ஸ்

தனது கச்சிதமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கமற இடம் பிடித்திருப்பவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்க... மேலும் பார்க்க

Empuraan: `மலையாள சினிமாவின் புதிய உச்சம்' - எம்புரான் படத்துக்கு ஆதரவு தெரிவித்த பினாராயி விஜயன்

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் ... மேலும் பார்க்க

Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடு... மேலும் பார்க்க