3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!
Empuraan: ``என் மகனை பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள்; இது தாயின் வலி'' - ப்ரித்விராஜின் தாயார் வேதனை
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்திருக்கும் `எம்புரான்' படத்திற்கு சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும் தலைவர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் படத்திற்கு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
இதனை தொடர்ந்து மோகன்லாலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக கூறியிருந்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணை குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

படத்திற்கு கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் குறித்தும் ப்ரிவித்ராஜ் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் அவரின் தாயார் மல்லிகா சுகுமாரன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், ``கடந்த சில நாட்களாக 'எம்பூரான்' படத்திற்கு எழுந்திருக்கும் சர்ச்சைகளை நான் கவனித்து வருகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் என் மகன் ப்ரித்விராஜ் என்பதைத் தவிர, எனக்கும் அந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால்தான் சர்ச்சைகளுக்கு நான் பதிலளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தேன்.
ஆனால் இப்போது சிலர் வேண்டுமென்றே ப்ரித்விராஜ், மோகன்லாலை ஏமாற்றினார் எனவும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எம்புரான் படத்தை எடுத்து அதை கையகப்படுத்தினர் என்றும் பிரசாரம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை அறிந்ததும், சிலர் ப்ரித்விராஜை தனிமைப்படுத்த முயற்சிப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது ஒரு தாயின் வலி.
இதை வெளிப்படையாகச் சொன்னதற்காக என்னைக் கேலி செய்யாதீர்கள்! ப்ரித்விராஜ் தங்களை ஏமாற்றினார் என்று மோகன்லாலோ அல்லது தயாரிப்பாளர்களோ இதுவரை சொல்லவில்லை.

மோகன்லால் என் சகோதரரைப் போன்றவர். சிறுவயதிலிருந்தே லாலை எனக்குத் தெரியும். மோகன்லால் என் மகன்களை பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார்.
ஆனால், லால் அல்லது தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் சிலர் என் மகனைப் பலிகொடுக்க முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்தப் படத்துடன் தொடர்புடைய யாரையும் இயக்குநர் ப்ரித்விராஜ் ஏமாற்றவில்லை, அதேபோல் படத்துடன் தொடர்புடைய யாரையும் ஏமாற்றவில்லை.
இனிமேலும் அப்படி செய்யமாட்டார். `எம்புரான்' படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஸ்கிரிப்டைப் படித்திருக்கிறார்கள். எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகு, அனைவரும் சரி என்று சொல்லிவிட்டார்கள்.
எழுத்தாளர் முரளி கோபி அவர்கள் படப்பிடிப்பு வேளையில் காட்சிகளை சரிசெய்ய எப்போதும் தயாராக இருக்கிறார். பிறகு படம் வெளியானதும், அதற்கு ப்ரித்விராஜ் மட்டுமே எப்படி பொறுப்பாவார்? ஒரு மாதத்திற்கு முன்பு நான் என் மகனுக்குப் போன் செய்தபோது, அவர் குஜராத்தில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

"நான் பிஸியாக இருக்கிறேன் அம்மா. லாலேட்டன் வந்துவிட்டார். இதுவரை எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் லாலேட்டனுக்குக் காட்ட வேண்டும்.
அதற்கு மோகன்லால், "நாம் ஆண்டனியுடன் விவாதிக்க வேண்டும்" என்றார். எம்புரான் படத்தில் இந்த இரண்டு பேருக்கும் தெரியாத ஒரு ஷாட் கூட இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த படத்தில் மோகன்லாலுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அவர்கள் இருவருக்குமே இதைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தனியார் செய்தி ஊடகத்திற்கு இந்த சர்ச்சை தொடர்பாக பேசியிருக்கும் ப்ரித்விராஜின் தாயார் மல்லிகா, `` ரமலான் தினத்தன்றும் நடிகர் மம்முட்டி எனக்கு மெசேஜ் செய்தார். என்னுடைய ஃபேஸ்புக் பதிவை பார்த்தவர் கவலைக் கொள்ளாதீர்கள் என எனக்கு மெசேஜ் செய்தார். இப்படியான விஷயங்கள் என்னைக் காயப்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

நான் இந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன். மம்முட்டியின் இந்தக் குணத்தை மறக்கக்கூடாது என என்னுடைய பிள்ளைகளிடமும் கூறியிருக்கிறேன்.
சினிமாவிலிருந்து அவர் ஒருவர்தான் எனக்கு ஆறுதல் வார்தைகளைக் கூறினார். அதைப் பார்த்ததும் நான் கண் கலங்கிவிட்டேன்" எனக் கூறியிருக்கிறார்.