செய்திகள் :

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர யூத அமைப்பான சாபாத் ஹஸிதிக் இயக்கத்தின் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2024 நவம்பர் 21 அன்று மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகாரளித்த நிலையில் நவ.24 அன்று அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது கொலையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அமீரகத்திலிருந்து துருக்கி நாட்டிற்கு தப்பி சென்றனர். பின்னர், அமீரக அதிகாரிகளின் கோரிக்கையின் படி அவர்கள் 4 பேரையும் கைது செய்த துருக்கி அதிகாரிகள் மீண்டும் அமீரகத்துக்கு நாடு கடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கோகனை பின் தொடர்ந்து அவரை கடத்தி கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து, சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள், கொலையாளிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் அபுதாபி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீவிரவாத நோக்கங்களுடன் இந்தக் கொலை அரங்கேறியுள்ளதாகக் கூறிய அபுதாபி நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் கடந்த மார்ச் 31 அன்று மரண தண்டனையும் அவர்களுக்கு உதவிய 4-வது நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், ஐக்கிய அமீரகத்தின் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அந்த வழக்கானது தானாகவே மேல்முறையீடு செய்யப்பட்டு மறுஆய்வுக்காக கூட்டாட்சி உச்ச் நீதிமன்றத்தின் குற்றவியல் பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, இந்த வழக்கும் மேல் முறையீடு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிக்க:பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளம... மேலும் பார்க்க

பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லித்துவேனியா அரசு மரியாதை!

லித்துவேனியா நாட்டில் ராணுவப் பயிற்சியின்போது பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அரசும் மக்களும் மரியாதை செலுத்துகின்றனர்.ஐரோப்பிய நாடான லித்துவேனியாவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக... மேலும் பார்க்க