செய்திகள் :

இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

post image

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்திருந்தது.

இருப்பினும், பிரதமர் நெதன்யாகு ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஆர்பனின் தலைமைச் செயலாளரான ஜெர்ஜெலி குல்யாஸ் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டமுறைகளுக்கும் உள்பட்டு ஹங்கேரி அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,உலக அளவிலான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரணட்டின் அடிப்படையில் அந்நபர் அதன் உறுப்பு நாடுகளில் கால் வைத்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது அவரது நெருங்கிய கூட்டாளியான ஹங்கேரி பிரதமர் ஆர்பன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லிதுவேனியா அரசு மரியாதை!

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.பழம்பெ... மேலும் பார்க்க

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க