செய்திகள் :

`மார்பக வளர்ச்சி; Transgender ஆக மாறுமா?' - டீன் ஏஜ் சிறுவனின் அச்சம் சரியா? | காமத்துக்கு மரியாதை

post image

டீன் ஏஜில், உடலில் நிகழ்கிற சில சிறிய பிரச்னைகள்கூட நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் பெரிதாக தோன்றலாம். அந்த சிறுவனுடைய பிரச்னையும் அப்படிப்பட்டதுதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த கேஸ் ஹிஸ்டரி பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

teen age boy
teen age boy

''அந்த சிறுவனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கலாம். அவனுடைய அப்பாவுடன் என்னை சந்திப்பதற்காக வந்திருந்தான். ஆள் நல்ல வளர்த்தியாக கொழுகொழுவென்று இருந்தான். அவனுடைய பிரச்னையும் அதுதான். சிறுவன் கொழுகொழுவென்று இருந்ததால், மார்பும் நார்மலைவிட சற்று பெரிதாக வளர்ந்திருந்தது. அதை, அவனுடைய நண்பன் ஒருவன் கிள்ளி விளையாட வீட்டில் வந்து சொல்லியிருக்கிறான். உடனே அதுபற்றி பள்ளிக்கூடத்தில் புகார் செய்து அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார், என்னை சந்திப்பதற்கு வந்திருந்த சிறுவனின் அம்மா.

இன்னொரு நாள், தன்னுடைய அம்மாவிடம் 'என்னோட செஸ்ட் கேர்ள்ஸ் மாதிரி இருக்கிறதால நான் ட்ரான்ஸ்ஜென்டர் ஆயிடுவேனாம்மா' என்று கேட்டிருக்கிறான். பயந்துபோன அவனுடைய அம்மா, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு அருகேயுள்ள டாக்டரை பார்க்க சொல்லியிருக்கிறார். அவர், இவர்களை என்னிடம் அனுப்பி வைத்திருந்தார்.

பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்
பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்

டீன் ஏஜுக்குள் நுழையும்போது, அதுவரை குழந்தைகளாக இருந்த சிறுவர்கள் திடீரென்று ஓங்குதாங்காக வளர ஆரம்பிப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் விரைகள் பெரிதாவது, அக்குள் மற்றும் ஆணுறுப்பைச் சுற்றி முடி வளர்வது, மூக்குக்குக் கீழே லேசாக நிறம் மாற ஆரம்பிப்பது என மெள்ள மெள்ள வளர்ந்த ஆணாக மாற ஆரம்பிப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக சில சிறுவர்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும். அதை கைனகமேஸ்டியா (Gynecomastia) என்போம். இந்த சிக்கல் இருக்கிற சிறுவர்கள் வீட்டு ஹாலுக்குள் சட்டை மாற்றக்கூட கூச்சப்பட்டுக்கொண்டு பெட்ரூமுக்குள் செல்வார்கள். இவர்கள் வளரும்போது உடற்பயிற்சி செய்வதற்குகூட சட்டையைக் கழட்ட தயங்குவார்கள்.

என்னிடம் வந்த அந்த சிறுவன் ஏதோ யூ டியூபில் பார்த்துவிட்டு, 'செஸ்ட் பெருசானா நான் ட்ரான்ஸ்ஜென்டர் ஆயிடுவேனா அங்கிள்' என்றான். 'இதுல கொஞ்சம்கூட உண்மையில்லடா. உன்னோட பிரச்னைக்கும் அந்த விஷயத்துக்கும் மெடிக்கலா எந்த கனெக்‌ஷனும் கிடையாது. நீ வளர வளர அந்தப்பகுதியில கூடுதலா இருக்கிற கொழுப்பு குறைஞ்சி நீ நார்மலா ஆகிடுவே' என்று அவனுக்கு புரிகிறபடி அவனை சமாதானப்படுத்தினேன்.

Sexologist Kamaraj

அதன்பிறகு அவனுடைய அப்பாவிடம், 'ஒருவேளை உங்கள் மகனுடைய மார்பில் பால் சுரப்பிகள் வளர்ந்திருந்தால், அவனுடைய 22 வயதுக்கு மேல அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கி விடலாம். தற்போது, அந்த அறுவை சிகிச்சையை செய்தால் மறுபடியும் மார்பக வளர்ச்சி ஏற்படலாம்' என்று தெளிவுப்படுத்தினேன்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Sexual Wellness: `கற்பனையிலும் இதை செய்யாதீர்கள்' -எச்சரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை-236

காற்றின் மொழி படத்தில், ஆர்.ஜே-வாக வேலைபார்க்கும் ஜோதிகாவிடம் 'பெண்களோட மார்பை பார்க்கிறேன்' என்று வருத்தப்படுவார் ஓர் ஆண். அதாவது, சம்பந்தப்பட்டப் பெண்களுக்கு உடலளவில் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்... மேலும் பார்க்க

`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235

''தாம்பத்திய உறவுதொடர்பான ஒரு சந்தேகத்துக்கு தீர்வு பெற, பெண் ஒருவர் ஆன்லைனில் தொடர்புகொண்டார். 'எனக்கு சுகப்பிரசவம்தான் நடக்க வேண்டுமென விரும்புகிறேன் டாக்டர். மூன்றாவது டிரைமெஸ்டரில் உறவு வைத்துக்கொ... மேலும் பார்க்க

Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள்... ஏன் இந்த நிலைமை?

எதிர்ப்பாலினர் மீது பாலியல் உணர்வு வராத சிலரும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இதை 'ஏசெக்‌ஷுவல்' நிலை என்போம். ஆண், பெண் இரு பாலினத்திலும் ஏசெக்‌ஷுவல் நபர்கள் உண்டு என்றாலும், ஆண்களால் திருமண வாழ்க்கை... மேலும் பார்க்க

`இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' - மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை - 234

’’இளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க ... மேலும் பார்க்க