செய்திகள் :

Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள்... ஏன் இந்த நிலைமை?

post image

திர்ப்பாலினர் மீது பாலியல் உணர்வு வராத சிலரும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இதை 'ஏசெக்‌ஷுவல்' நிலை என்போம். ஆண், பெண் இரு பாலினத்திலும் ஏசெக்‌ஷுவல் நபர்கள் உண்டு என்றாலும், ஆண்களால் திருமண வாழ்க்கையைச் சுலபமாகத் தவிர்க்க முடியும் அல்லது திருமணத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும் . ஆனால், ஏசெக்‌ஷுவல் பெண்களுக்கு தங்களின் நிலை குறித்த புரிந்துணர்வு இருக்காது என்பதால் பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும் சமூகத்திற்காகவும் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால், தாம்பத்திய உறவு என்ற விஷயத்தில் கணவன்-மனைவி இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும். ஏசெக்‌ஷுவல் நிலை என்றால் என்ன; அது உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்னையா; இதுவும் பாலியலில் ஒரு நிலைதானா..? மனநல மருத்துவர் ஷாலினி விளக்குகிறார்.

Sexual Health

"ஏசெக்‌ஷுவல் நிலை என்பது பிரச்னையல்ல, பாலியலில் ஒரு நிலை. இந்த நிலை எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. கடந்த தலைமுறைகளில் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாதவர்களை வற்புறுத்தி, பெற்றோர் திருமணம் செய்து வைத்தாலும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாததால் திருமண உறவை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், இதுபற்றிய விழிப்புணர்வு மெள்ள மெள்ள வந்துகொண்டிருப்பதால், தனக்கு எதிர்ப்பாலின நபர் மீது ஈடுபாடு வரவில்லை. அதனால் காதலோ, திருமணமோ தேவையில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறை பெண்களில் சிலர், 'நான் லெஸ்பியன்' என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், லெஸ்பியன் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஏசெக்‌ஷுவல் நிலையிலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அதை உறுதிப்படுத்த முறையான மருத்துவ பரிசோதனைகள் இருக்கின்றன அவற்றைச் செய்து பார்த்து ஏசெக்‌ஷுவல் என்று முடிவானால், அதன்படி தாராளமாக வாழலாம்" என்றவர், அவை குறித்து விளக்க ஆரம்பித்தார்.

''முதலில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு டிப்ரெஷன் போன்ற மனம் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Sexual Health

அடுத்து, Obsessive-compulsive disorder எனப்படும் ஓசிடி குறைபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அடுத்தவர் தொடுவதுகூட பிடிக்காது. இவர்களுக்கு ஓசிடி-க்குத்தான் சிகிச்சை தர வேண்டுமே தவிர, இவர்களை ஏசெக்‌ஷுவல் நபர்கள் என்று குறிப்பிடக்கூடாது.

ஏசெக்‌ஷுவல் நபர்கள் என்றாலே அவர்கள் சாமியார்கள் போல இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் எல்லோரையும்போல சாதாரணமாகத்தான் தோற்றமளிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு இல்லையென்பது தெரிந்தபிறகும் அவர்களுடைய புறத்தோற்றத்தின் மீது விருப்பப்பட்டு அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.

ஏசெக்‌ஷுவல் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட கணவர்களுக்கு ஒரு வார்த்தை. 'இவ்ளோ அழகா இருக்கா; அன்பா இருக்கா. ஆனா, கட்டிப்பிடிக்கக்கூட மறுக்குறாளே' என்கிற தவிப்பில் அவர்களை வற்புறுத்தவோ, வன்முறையாக நடந்துகொள்ளவோ கூடாது. அது அவர்களுடைய பாலியல் நிலைமை. அதற்கு மரியாதை கொடுப்பதுதான் சரி" என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' - மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை - 234

’’இளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க ... மேலும் பார்க்க

Women Sexual Health: உச்சக்கட்டத்திலும் பெண்ணுக்குச் சம உரிமை இல்லை... தீர்வு என்ன?

பெண்களுக்கும் தாம்பத்ய உறவின்போது ஆர்கசம் எனும் உச்சகட்டம் வரும்; வர வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் உறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும... மேலும் பார்க்க

கிட்டத்தட்ட உறுப்பே இல்லை... கலங்கி நின்ற கணவன், துணை நின்ற மனைவி! | காமத்துக்கு மரியாதை - 233

இப்போ எனக்கு மேரேஜ் செஞ்சுக்க விருப்பமில்லைன்னு ஓர் ஆண் சொன்னா, அவனோட குடும்பத்தினர் மட்டுமில்லாம, அவனோட காதலியும் அதை சீரியஸா எடுத்துக்கணும். அந்த ஆண் சொல்றதை பொருட்படுத்தாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா இ... மேலும் பார்க்க

தாம்பத்திய உறவில் விருப்பமில்லாத காலம்... எப்படிக் கடப்பது? காமத்துக்கு மரியாதை 232

எல்லா பெண்களுமே வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குடும்பத்தினர் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட தன் நலனுக்குக் கொடுக்காத பல பெண்கள், 'த... மேலும் பார்க்க