எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 34/2025
பணி: Nursing Officer
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது டிஜிஎன்எம் படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் நர்சிங் படிப்பை இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் ஆல் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் 12, இரண்டாம் கட்டத் தேர்வு மே 2 ஆம் தேதி நடைபெறும்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு நடைபெறும் இடம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது , ஓபிசி பிரிவினர் ரூ.3,000, எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.2,400 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.alimsexams.ac.in இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். .
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.3.2025