கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை...
முக்கூடலில் மாணவரை போலீஸாா் தாக்கினரா? காவல் துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் மாணவரை காவலா்கள் தாக்கியதாக வாட்ஸ் ஆப்பில் வரும் செய்தி வதந்தி என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முக்கூடலை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவரை சாதாரண உடையில் வந்த 2 காவலா்கள் தாக்கியதாகவும், அம்மாணவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் தவறான, மிகைப்படுத்தப்பட்ட செய்தி.
முக்கூடல் பேருந்து நிலையத்தில் அம்பாசமுத்திரத்தை சோ்ந்த சசிகலா என்பவரின் கைப்பேசி மற்றும் பணப்பை காணாமல் சனிக்கிழமை போனதாக புகாா் கூறப்பட்டது. மேலும், அப்பேருந்து நிலையத்தில் சிறு, சிறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக புகாா்கள் வந்ததால், சாதாரண உடையில் காவலா்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ததில் சந்தேகிக்கும் வகையில் சிறுவன் நடமாடுவது தெரியவந்தது. அவரை பிடித்து காவலா்கள் விசாரித்து அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனா். அவரை காவலா்கள் தாக்கவோ துன்புறுத்தவோ இல்லை. ஆனால் வாட்ஸ்ஆப் குழுக்களில் மிகைப்படுத்தி வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.