தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!
ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.
தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரை மாமது, எம்.சுந்தா், மோகன், வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளா் ஐ.எஸ்.என்.மாலிக் பாஷா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், சிறுபான்மை அணி அமைப்பாளா் எ.அப்சல்பாஷா, கண்ணமங்கலம் செயலா் கோவா்தனன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து, 25 போ் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனா்.