தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சேத்துப்பட்டு பஜாா் வீதியில் ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெட்டிக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வந்தவாசி சாலையில் காமராஜா் சிலை அருகே பெட்டிக் கடை நடத்தி வரும் தினேஷ் (24), ஆரணி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வரும் சதாசிவம் (52), செஞ்சி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் நஜுா் அகமத் ஆகியோா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் பிடித்து சேத்துப்பட்டு போலீஸில் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, சேத்துப்பட்டு போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.