செய்திகள் :

நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் "அக்ரி ஸ்டேக்'!

post image

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் இந்த வலைதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தப் பணிகள் உழவர் நலத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றின் மூலம் இந்த வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகையைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைதளப் பதிவு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த(சென்னை நீங்கலாக) 22.48 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

துறை வாரியாக கிராமங்கள் ஒதுக்கீடு: வலைதளப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க, வேளாண்மைத் துறை மட்டுமின்றி அதன் சகோதரத் துறைகளுக்கும் கிராமங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேளாண்மைத் துறைக்கு 10,528 வருவாய் கிராமங்கள், தோட்டக்கலைத் துறைக்கு 5,226, வேளாண் வணிகத் துறைக்கு 982, வேளாண் பொறியியல் துறைக்கு 337, வேளாண் விதை சான்றளிப்புத் துறைக்கு 212 வருவாய் கிராமங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 27.65 லட்சம் விவசாயிகளில் 13.34 லட்சம்(48.26 சதவீதம்) விவசாயிகளின் விவரங்கள் அக்ரிஸ்டேக் வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே போன்று தோட்டக்கலைத் துறை 14.27 லட்சம் விவசாயிகளில் 7.10 லட்சம் பேரின்(49.77 சதவீதம்) விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் வணிகத் துறை 2.46 லட்சம் பேரில் 1.21 லட்சம்(49.46 சதவீதம்), வேளாண் பொறியியல் துறை 95ஆயிரம் பேரில் 41ஆயிரம்(42.86 சதவீதம்), வேளாண் விதை சான்றளிப்புத் துறை 60ஆயிரம் பேரில் 28ஆயிரம் (46.77 சதவீதம்) விவசாயிகளின் விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்தால் மட்டுமே உதவித் தொகை: வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: "அக்ரி ஸ்டேக்' வலைதளப் பதிவுக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. விவரங்களைப் பெறச் செல்லும் அலுவலர்களிடமும் முறையான தகவல் தெரிவிப்பதில்லை. இதனால், வலைதளப் பதிவேற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து உழவர் நலத் துறை செயலரிடம், பல்வேறு மாவட்டங்கள் தரப்பிலும் தெரிவித்தோம்.

இந்த நிலையில், கௌரவ நிதி உதவித் தொகை பெற பதிவு செய்த பெற பதிவு செய்த விவசாயிகளின் பட்டியலுக்குப் பதிலாக நிதி உதவி பெறும் விவசாயிகளின் தரவுகளை மட்டுமே பதிவு செய்தால் போதுமானது என இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வலைதளத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

'தமிழகத்தில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த(சென்னை நீங்கலாக) 22.48 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் "அக்ரி ஸ்டேக்' வலைதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.'

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் அவர் பேசுகையில், பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில... மேலும் பார்க்க

அப்பாவுக்கு எதிரான தீர்மானம்: காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்ப... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பாஜக, பாமக புறக்கணிப்பு!

அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை பாஜக, பாமகவினர் புறக்கணித்தனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று காலை சட்டப்பேரவ... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற மாநில தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே த... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: செங்கோட்டையன் ஆதரவு!

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.3... மேலும் பார்க்க

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேச... மேலும் பார்க்க