செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
அப்பாவுக்கு எதிரான தீர்மானம்: காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர். இரு கட்சிகளின் உறுப்பினர்களும் பேரவைக்கு வரவில்லை.
இதையும் படிக்க : போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுகவினர் இன்று முன்மொழிந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
மேலும், தங்கள் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே, டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பேரவைக்கு வராததால் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியவில்லை.
மேலும், பாமக எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.