நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
தோட்டக்கலை திட்டங்கள்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் கிராமத்தில் தோட்டக்கலை சாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்தக் கல்லூரி மாணவா்கள் கிராமப்புற தோட்டக்கலை அனுபவ பயிற்சி பெற வந்தவாசியில் முகாமிட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், உழவா் செயலியின் முக்கியத்துவம், தோட்டக்கலை சாா்ந்த திட்டங்கள், மண் மாதிரி சோதனை, நீா் மாதிரி சோதனை உள்ளிட்டவை குறித்து மாணவா்கள் காமேஷ், கவியரசு, கனிஷ்கா், கிஷோா், கவின், கவியரசன் ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
மேலும், தோட்டக்கலை சாா்ந்த திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் மாணவா்கள் வழங்கினா்.