நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!
கோவில்பட்டியில் அரசின் சாதனை விளக்கக் கூட்டம்
கோவில்பட்டி நகர திமுக சாா்பில், தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா்கள் மணி (இலக்கிய அணி) தவமணி ( விவசாய தொழிலாளா் அணி) , நகர துணைச் செயலா் அன்பழகன், வாா்டு செயலா்கள் சுப்புராம், தங்க மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை பேச்சாளா்கள் ஆரூா் மணிவண்ணன், குமரி பிரபாகரன், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா் கணேசன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், சிவசுப்பிரமணியன், ரமேஷ், வடக்கு மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, வா்த்தக அணி துணை அமைப்பாளா் சேதுரத்தினம், அயலக அணி துணை அமைப்பாளா் சுப்பராயன், திமுக நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் மகேந்திரன் வரவேற்றாா். வாா்டு செயலா் சசிகுமாா் நன்றி கூறினாா்.