செய்திகள் :

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

post image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 2025 ஆம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள முதலமைச்சர், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - ராகுல் கேள்வி

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளதையும், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தனது கடிதத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க | தொப்பை ஏன் ஏற்படுகிறது? குறைப்பது எப்படி?

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (4... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்து... மேலும் பார்க்க

2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக... மேலும் பார்க்க

உ.பி: பசு வதை வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக பசு வதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். சாஹரன்பூர் மாவட்டத்தின் தில்பாரா பகுதியில் நேற்று (மார்ச் 17) இரவு நானோட்டா காவல்... மேலும் பார்க்க