செய்திகள் :

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்ளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும், பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதற்கான முழுமையான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாஃபர் அதிவிரைவு ரயிலை சிறைப்பிடித்தனர். இதில், அந்த ரயிலில் பயணித்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க:காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் மூலம் 30 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானின் பூர்வக்குடிகளான பலூச் இன மக்கள் பல தசாப்தங்களாக அவர்களது சொந்த நிலப்பரப்பில் அந்நாட்டு அரசினால் ஒதுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அம்மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், தங்களது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினரை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பலூசிஸ்தான் தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், அம்மாகாணத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (4... மேலும் பார்க்க

2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு மு... மேலும் பார்க்க