சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!
9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
இதையும் படிக்க: உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ்!
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக புதன்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கடலில் அவர்களின் விண்கல கேப்சூல் தரையிறங்கிய போது 'ட்ராகன்' விண்கல கேப்சூலைச் சுற்றி டால்பின்கள் வட்டமடித்தன. பின்னர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சிலர் பாதுகாப்பாக வெளியே அழைத்துவரப்பட்டனர்.
இந்தக் காணொளிகள் இணையத்தில் வைரலாகிவரும் வேளையில் விண்வெளி வீரர்களை அவை வரவேற்றதாக சமூக ஊடகங்களில் இணையதளவாசிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
There are a bunch of dolphins swimming around SpaceX's Dragon capsule. They want to say hi to the Astronauts too! lol pic.twitter.com/sE9bVhgIi1
— Sawyer Merritt (@SawyerMerritt) March 18, 2025