செய்திகள் :

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

post image

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்திலிருந்து வெளியே வந்தார்.

சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(மார்ச் 18) காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.

மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அடுத்த 30 - 60 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணி தொடங்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறு... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூம... மேலும் பார்க்க