தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
உ.பி: பசு வதை வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக பசு வதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.
சாஹரன்பூர் மாவட்டத்தின் தில்பாரா பகுதியில் நேற்று (மார்ச் 17) இரவு நானோட்டா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நோக்கி காவல் துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களது வாகனம் சறுக்கி இருவரும் கீழே விழுந்ததுள்ளனர். பின்னர், அவர்களை விரட்டிய காவலர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முயன்றதாகக்கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: 2024-ல் இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல்: மத்திய அரசு தகவல்
இதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவர்களில் ஒருவரான ஷாம்லி பகுதியைச் சேர்ந்த ஜாவெத் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
அவர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு தற்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், இருளில் தப்பியோடிய அவரது கூட்டாளியான முஹம்மது ஃபுர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாவெத் மீது ஏற்கனவே கேங்ஸ்டர் வழக்கு மற்றும் சட்டவிரோத பசு வதை வழக்கு ஆகியவைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள், பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனம் மற்றும் கால்நடைகள் பலியிட பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.