ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை
ஆசிரியை இரா.தேவி வரவேற்றாா்.
தெள்ளாா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆறுமுகம், ஆசிரியா் பயிற்றுநா் பிரபு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி ஆசிரியா்கள் ராஜா, லிடியா சொா்ணகுமாரி, சுஜாதா, ஹிதாயத்துல்லாபேக், மேகலா மற்றும் கிராம முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.